முதலாவது போட்டியில் இலங்கை வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

30 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக தில்ஷான் 56 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 40 ஓட்டங்களையும், சந்திமால் 40 ஓட்டங்களையும், மெத்தியூஸ் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

216 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ப்லச்சர் 57 ஓட்டங்களையும், பொல்லார்ட் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை சார்பாக சச்சித்ர சேனாநாயக்க 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

Related Posts