முதலாவது தங்கத்தை வென்ற இலங்கை

7ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டி, முதலாவது தங்கப்பதக்கத்தை பெற்றுகொண்டுள்ளது.

srilankan-cricket

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 65 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக லஹிரு திரிமான்னே அதிக பட்ச ஓட்டங்களாக 57 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணிசார்பாக முஹம்மத் நபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Posts