முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

காலியில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது. அதில் மெத்திவ்ஸ் 64 ஓட்டங்களையும் சந்திமால் 59 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஸ்வின் 6 விக்கெட்களையும் மிஸ்ரா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 375 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. அதில் தவான் 134 ஓட்டங்களையும் கோலி 103 ஓட்டங்களையும் ஷா 60 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தரிந்து கௌசல் 5 விக்கெட்களையும் நுவான் பிரதீப் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி தினேஸ் சந்திமாலின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் 367 ஓட்டங்களை எட்டியது. சந்திமால் ஆட்டமிழக்காமல் 162 ஓட்டங்களையும் முபாரக் 49, திரிமான்ன 44, சங்கக்கார 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன்படி இந்திய அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 48 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தினர்.

போட்டியின் நாயகனாக தினேஷ் சந்திமால் தெரிவுசெய்ப்பட்டார்.

Related Posts