இவ்வருடத்தின் முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றன.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மீள திறப்படுகின்றன.
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தப்படும் 58 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய சகல பாடசாலைகளும் இன்று ஆரம்பமாவதோடு, குறித்த 58 பாடசாலைகளும் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், பணிப்புறக்கணிப்பு காரணமாக வடக்கில் அரச போக்குவரத்து சேவை முடங்கியுள்ளதால், மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.