முதலமைச்சர் வேட்பாளர் யாரென அறிவித்தால் விவாதத்துக்கு வருவேன் – சி.வி.விக்னேஸ்வரன்

vicknewaran-tnaஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவித்தால் அவருடன் விவாதம் நடத்த தயார் என்று தமிழ்க் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு.அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஈ.பி.டி.பி. யின் வேட்பாளர் தவராசா நீதியரசர் விக்னேஸ்வரனை பொது விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை நிராகரித்துள்ள விக்னேஸ்வரன் அதற்கான காரணத்தையும் விபரித்திருக்கிறார்.

தவராசாவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பதாவது;

நவிபிள்ளை அம்மையாரைச் சந்தித்து விட்டு இன்றுதான் நான் யாழ்ப்பாணம் திரும்பினேன். உங்கள் கடிதம் கண்டேன். நன்றி. பத்திரிகைகளுக்கும் இதுபற்றி நீங்கள் தெரியப்படுத்தியுள்ளதையும் அறிந்தேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலவிதங்களில் அச்சுறுத்தல்களுக்கும் பயமுறுத்தல்களுக்கும் உள்ளாகிவரும் இந்நாட்களில் தேர்தல் சம்பந்தமாக நீங்கள் எழுதியிருக்கும் கடிதம் மகிழ்வை உண்டாக்கியது. பொது விவாதம் என்பது வரவேற்கத்தக்கதொன்றேபேச்சுகளும் விவாதங்களும் எனக்குப் புதியனவையும் அல்ல. என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts