முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது சில தினங்களில் அறிவிக்கப்படும்! இரா.சம்பந்தன்

sampanthan_-330x250வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் அடுத்த சில தினங்களில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஏகமனதான முடிவாகவே அது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

நாடாளுமன்ற உறுபபினர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டும் என ஒரு தரப்பும், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனை நியமிக்க வேண்டும் என மறுதரப்பும் வலியுறுத்தி வருகின்றன.

இன்னிலையிலேயே சம்பந்தன் அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளார்

Related Posts