வடக்கு மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சராக தற்காலிகமாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் முதலமைச்சர் நேற்று(புதன்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராஜா இருவரும் ஊழலில் ஈடுபட்டுள்ளமையை நிரூபித்து விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து குறித்த இரு அமைச்சர்களையும் தாமாக பதவியிலிருந்து விலகுமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இதனால் பல குழப்ப நிலை மாகாணசபையில் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் இரு அமைச்சர்களும் தமது பதவிகளில் இருந்து விலகிய நிலையில் குறித்த இரு அமைச்சுப்பதவிகளையும் வடக்கு மாகாண முதலமைச்சர் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமானம் செய்துகொண்டுள்ளார்.