முதலமைச்சர் மீதான டெனீஸ்வரனின் மனு தள்ளுபடி!

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தெஹிதெனிய, நீதியரசர் அமரசேகர முன்னிலையில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கினை ஆராயாமல் வழக்கு ஆவணங்களில் காணப்பட்ட குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியே மேற்படி வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த உத்தரவினை எதிர்த்து உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts