முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெறவேண்டி அ.தி.மு.க. தொண்டர் தற்கொலை!!

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெறவேண்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி வருகிறது. ஆனால் தேவையற்ற வதந்திகள் வெளியாவதால் கட்சியினர் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் உடல்நலம் பெற வேண்டி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் கணேசன் என்பவர் நேற்று மாலை தீக்குளித்தார். இதனால் அவரது உடல் வெந்தது. உடனடியாக அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 30 சதவீத தீக்காயமடைந்த அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வடுகுப்பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் சரணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts