வடமாகாண முதலமைச்சராக சத்திப்பிரமாணம் செய்து கொண்ட க.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக தனது கடமைகளை இன்று உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்த வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- Saturday
- February 22nd, 2025