முதலமைச்சர் உட்பட 7 பேருக்கு நீதிமன்று அழைப்பாணை!

judgement_court_pinaiவட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்தே அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைவர் தாக்கல் செய்த மனுவொன்றை இன்று புதன்கிழமை விசாரித்த நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதேச சபையின் 2014 வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதால் தான் பதவி விலக்கப்படுவதை எதிர்த்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன், உள்ளூராட்சி சபை ஆணையாளர், பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட 7 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Related Posts