முதலமைச்சரைச் சந்திப்பதற்கு அனுமதி கோரிய சுகாதாரத் தொண்டர்கள்

vicky0vickneswaranவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பதற்காக சுகாதாரத் தொண்டர்கள் அனுமதி கோரியுள்ளனர்.

யாழ்.மாவட்டத்திலுள்ள பொது சுகாதார பணிமனைகளின் கீழ் பணியாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் கடந்த வியாழக்கிழமை திகதி முதல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

15 வருடங்களுக்கு மேலாகப் பணிபுரியும் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையெனக் கூறியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இருந்தும், சுகாதார சேவைகள் சிற்றுழியர்களுக்கான வெற்றிடங்கள் தற்போது இல்லையெனவும், அதற்கான வெற்றிடங்கள் காணப்படும் இடத்து நீங்கள் முன்னுரிமை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள் எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இதனால் சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே மேற்படி தொண்டர்கள் தாங்கள் வடமாகாண முதலமைச்சரைத் சந்திப்பதற்கு விரும்புவதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் கோரியுள்ளனர்.

அத்துடன், முதலமைச்சரைச் சந்திக்கும் போது தாம் மகஜர் ஒன்றினை முதலமைச்சருக்கு வழங்கவுள்ளதாகவும் சுகாதாரத் தொண்டர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

தொண்டர்களின் 11 நாட்கள் போராட்டம் கைவிடப்பட்டது

சுகாதார சேவை சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் இல்லை – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Related Posts