முதலமைச்சருக்கு சொகுசு வாகனம்

வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சருக்குமான வாகனங்கள் இன்று கையளிக்கப்பட்டன.

அரசினால் வரிவிலக்கழிக்கப்பட்டு மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் வாகனங்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோருக்கான 2 வாகனங்கள் இன்று கையளிக்கப்பட்டன.

car-cm-vicky

மேலும் முதலமைச்சருக்கு 10மில்லியன் ரூபா மற்றும் சுகாதார அமைச்சருக்கு 7மில்லியன் ரூபா பெறுமதியுள்ள வாகனங்கள் ரொயாட்டா கம்பனியிலிருந்து கொண்டு வரப்பட்டே அவை வழங்கப்பட்டன.

2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் வாகன கொள்வனவுக்கு என வரவு செலவுத்திட்டத்தில்
தலா 58 இலட்சம் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் இருந்தே குறித்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வடமாகாண முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர்கள் வருகை தராத காரணத்தினால் அவர்களுக்கான வாகனங்களை அமைச்சர்களின் செயலாளர்களிடம் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏசந்திரசிறி கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

car-cm-vicky-1

Related Posts