அவைத்தலைவர் தலைமயிலான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினரால் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி 18 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுனரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தை தொடர்ந்து ஆளுனர் முதல்வரின் பலத்தை நிரூபிக்குமாறு கேட்டிருந்தார் இதுவரைக்கும் முதலமைச்சருக்கு அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட 16 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது என அறியவருகின்றது.இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
தொடரும் உட்கட்சிக்குழப்பங்களால் ஆளுங்கட்சிக்குள் குழப்பம் ஏற்படுமாயின் மாகாணசபை கலைப்பதற்கே வாய்ப்பு அதிகம் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன. முதலமைச்சரை அகற்றி கட்சிக்குழப்பங்களை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் தமிழரசுக்கட்சியின் பெயரை கெடுப்பதை தவிர்க்க இந்த முடிவை எடுக்க சம்பந்தர் ஆலோசனை வழங்க இருப்பதாகவும் தெரிய வருகின்றது. முதலமைச்சர் இறுதி வரை தொடர்வதையே சம்பந்தர் விரும்புவதாகவும் இருப்பினும் கட்சியின் கட்டுப்பாடு அவரிடம் இருந்து சற்று விலகிவிட்டிருப்பதாகவும் அறிய வருகின்றது.
முன்னதாக தமிழரசுக்கட்சி சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் மீதான விசாரணைகளை நிறுத்தினால் வாபஸ் பெறுவதாக சம்பந்தர் பேரம் பேசியதாகவும் அதற்கு இடைநிறுத்துவதை வேண்டுமானால் நிறுத்தலாம் ஆனால் விசாரணையினை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என விக்னேஸ்வரன் உறுதியாக உள்ளதாகவும் அதற்கான பதிலுடன் வருவதாக சம்பந்தன் கூறியதாக முடித்துக்கொண்டபோதிலும் அவர்கள்தரப்பில் இருந்து பதில் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. மேலும் அவைத்தலைவராக சிவிகே தொடர்வதையும் முதல்வர் விரும்பவில்லை என்றும் தெரியவருகின்றது.
இதேவேளை நாளை தமிழ்மக்கள் பேரவை முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.