முதலமைச்சருக்காக ஐங்கரநேசன் தலைமையில் புதிய கட்சி?

(File Photo)

வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நேற்று தைப்பொங்கல் நாள் அன்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் என்ற பெயரில் பசுமைக் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஐங்கரநேசன் மாகாண சபையில் முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரனுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுபவர். இதனால் மாகாண சபையில் ஆளுங்கட்சிக்காரர் களினாலேயே நெருக்கடிகளுக்கும் ஆளாகி வருகிறார்.

இந்நிலையில் இவர் ஆரம்பித்துள்ள புதிய கட்சி மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவுற்றதும் முதலமைச்சருக்கு ஒரு கட்சி தேவை என்ற அடிப்படையில் அவரது ஆலோசனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. திருநெல்வேலியில் உள்ள இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற கட்சியின் தொடக்கக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் எவரும் அழைக்கப்படாததால் கட்சியின் ஏனைய பதவி நிலைகளுக்கு உரியவர்கள் பற்றியோ கட்சியின் நோக்கம் குறித்தோ அறிந்து கொள்ள முடியவில்லை.

Related Posts