முதலமைச்சரால் விசேட வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

போரல் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் – தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை பிற்பகல் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில், தெரிவு செய்யப்பட்ட நான்கு குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டத்துக்காக முதற்கட்ட நிதிக் காசேலைகள் முதலமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டன.

உள்ளூராட்சி அமைச்சின் நிதியிலிருந்து நான்கு குடும்பங்களுக்கும் தலா ஆறு லட்சம் ரூபா வீட்டுத் திட்டத்தக்காக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் முதலமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, பெண் தலைமைக் குடும்பங்கள் மூன்றுக்கு தையல் இயந்திங்களும், மாணவர்கள் 11 பேருக்கு சைக்கிள்களும் வழங்கிவைக்கப்பட்டன.

Related Posts