முதலமைச்சராகிறார் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக, சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஆட்சியமைக்க வருமாறு, ஆளுநரால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் பதவியேற்கவுள்ளார்.

ஆட்சியமைப்பது தொடர்பாக ஆளுநரைச் சற்று முன்னர் சந்தித்த பழனிசாமிக்கு, இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

பதவியேற்பு வைபவம், இன்று மாலை 4.30க்கு இடம்பெறவுள்ளது.

பதவியேற்றாலும், தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு, எடப்பாடி பழனிசாமிக்கு, 15 நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்குள், ஆட்சியமைக்கத் தேவையான 118 சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு, தனக்கு உண்டென்பதை அவர் நிரூபிக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts