முதற்கட்டமாக அரசியல் கைதிகள் 43 பேர் விடுதலை – யாழில் நீதியமைச்சர்

அரசியல் கைதிகள் 43 பேர், முதற்கட்டமாக விடுதலை செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் வைத்து நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (03) சட்டத்தரணிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, 43 பேரை வழக்குகள் எவையுமின்றி உடனடியாக விடுதலை செய்வது என்றும், மேலும் சிலரை, அதாவது சிறிது கடுமையான விடயங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்குப் பிணை வழங்குவது என்றும், ஆகப்பாரதூரமான விடயங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Related Posts