Ad Widget

முதன் முதலில் தனிதமிழ் ஈழம் தான் ஒரே தீர்வென்பதனை முன்னிறுத்திய கட்சி எமது கட்சி – டர்ஷன்

கொழும்பு வாழ் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்குமாக தமிழர் விடுதலை கூட்டணி குரல் கொடுக்கும். நாட்டின் இன்றைய சூழ்நிலையில் தலைநகர் கொழும்பில் தொன்மையான  தமிழ் கட்சி என்றவகையில்  பாராளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில்  போட்டியிடுகின்றோம்.

இன்று பேரினவாத கட்சிகளோடு இணைந்து மற்றவர்கள் போட்டியிடுகின்ற நிலையில் நாம் தமிழ் கட்சியும் கிட்டதட்ட மூன்று தலைமுறைகளை கடந்த அனுபவமுள்ள கட்சியுமான தமிழர் விடுதலை கூட்டணியில் தலைநகர் கொழும்பில் போட்டியிடுவதனை பெருமையாகவே கருதுகின்றோம். எமது மக்கள் எமது இந்த முயற்சியினை அங்கீகரித்து எமது கட்சிக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்புவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

கொழும்பில் மட்டுமல்லாது முழு இலங்கையிலுமே பேசப்படும் கட்சியாக தமிழர் விடுதலைக்கூட்டணி உருவெடுத்துள்ளது. முதன் முதலில் தனிதமிழ் ஈழம் தான் ஒரே தீர்வென்பதனை முன்னிறுத்திய கட்சி எமது கட்சி என்பதோடு இன்றும் சர்வதேச நாடுகளினதும் எமது மக்களினதும் அனுசரணையோடு தமிழீழத்திற்கு சமமான ஒரு தீர்வினை அடைவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் கட்சி தமிழர் விடுதலை கூட்டணி  என்பதனை மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை என்பதனை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்று கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார்.

Poster Makethiran

Related Posts