முதன்முறையாக இணையும் கமல்-பிரபு-கார்த்திக்

கௌதம் கார்த்திக் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படம் ‘முத்துராமலிங்கம்’. இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். பஞ்சு அருணாச்சலம் பாடல்களை எழுதியுள்ளார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவும் – பஞ்சு அருணாச்சலமும் இப்படத்தின் மூலம் இணைகிறார்கள். இப்படத்தில் நாயகிகளாக கேத்ரீன் தெரசா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும், கவுதம் கார்த்திக்கின் அப்பா கார்த்திக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுமட்டுமில்லாமல், பிரபு, விவேக் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

தற்போது, இப்படத்தில் கமல் ஒரு பாடலை பாடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கமலுடன் இணைந்து கார்த்திக் நடித்திருந்தார். அதேபோல், பிரபு கமலுடன் இணைந்து நடித்திருந்தார்.ஆனால், கமல்-பிரபு-கார்த்திக் மூவரும் எந்த படத்திலும் இணைந்ததில்லை. தற்போது முதன்முறையாக இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

Related Posts