முதன்முதலாக ஷோரூம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட ரஜினி

ரஜினி தற்போது ‘கபாலி’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரஜினி கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு சென்று அங்கேயே தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.

rajini-open

இந்நிலையில், மலேசியாவில் ஜலன் துன் தன் சீவ் சின் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஷோரூம் ஒன்றை ரஜினி திறந்து வைத்துள்ளார். இந்த ஷோரூம் தத்தக் அப்துல் மாலிக் தஸ்தாகீர் என்பவருடையது. இவர் ரஜினி தற்போது நடித்து வரும் ‘கபாலி’ படத்தின் மலேசியா வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி இதுவரை எந்தவொரு கடையையும் தனது கையால் திறந்து வைத்தது கிடையாது. தற்போது, முதல்முறையாக ஒரு ஷோரூமை திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கபாலி’ படத்தை ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இந்த மாத இறுதியில் மலேசியாவில் படப்பிடிப்பு முடிவடைகிறது. அதன்பின்னர், படக்குழுவினர் சென்னைக்கு வருகின்றனர்.

Related Posts