முண்டாசுப்பட்டி படகுழுவினருக்கு ரஜினி பாராட்டு

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டூடியோ இணைந்து தயாரித்திருக்கும், ‘முண்டாசுப்பட்டி’ படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. விஷ்ணு, நந்திதா, காளி, ராமதாஸ் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தயாரிப்பு நிறுவனத்தினர் போட்டுக் காட்டினர்.

moondasupatti

படத்தை ரசித்து பார்த்த ரஜினி படக் குழுவினரை மனதார பாராட்டினார். பல இடங்களில் தன்னை சிரிக்க வைத்தாகவும், படம் பார்க்கும்போது ரிலாக்ஸாக இருந்ததாவும் ரஜினி குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக முனீஷ்காந்த் கேரக்டரில் நடித்த ராமதாசையும், விஷ்ணுவின் நண்பராக நடித்த காளியையும் பாராட்டினார்.

காமெடியில் பெரிய இடத்துக்கு வர வாய்ப்பிருப்பதை சுட்டிக்காட்டி வாழ்த்தினார். விஷ்ணுவுக்கு இந்தப் படம் திருப்பமாக இருக்கும் என்றும், நந்திதா நேட்டிவிட்டியாக இருப்பதாகவும் ரஜினி குறிப்பிட்டுளார். படக்குழுவினர் ரஜினியிடம் நேரடியாக வாழ்த்து பெற்றுள்ளனர்.

Related Posts