முட்டை குடித்து, தலைகீழாக நின்று புதிய சாதனை படைத்த அப்புக்குட்டி..!

இளவாலை சிறுவிளானைச் சேர்ந்த அப்புக்குட்டி இராஜேந்திரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டு புதிய சாதனைகளை படைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

விளையாட்டுத்துறையில் ஆர்வம் மிக்க இவர் திருமணம் ஆகிய போதிலும் தனது விளையாட்டுத் துறையின் பால் உள்ள ஆர்வத்தைக் கைவிடாத நிலையில் காணப்படடார்.

இந் நிலையில் வெளிநாடு சென்று திரும்பிய பின்னர் தனது சுய முயற்சியினால் தன்னாலான சாதனைகளை படைக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக காணப்பட்டார்.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஆதரவுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் தலைகீழாக நிற்றல் மற்றும் முட்டை குடித்தல் ஆகிய சாதனைகளை புரிய முயன்று வெற்றியும் பெற்றுள்ளார்.

இளவாலை புனித அன்னம்மான் ஆலய முன்றலில் பெரும் எண்ணிக்கையான பொது மக்கள் மற்றும் பங்கு தந்தை உட்பட ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தலைகீழாக ஒரு மணித்தியாலங்கள் நிற்கும் சாதனையைப் புரிந்து இதனை இலங்கையின் சாதனையாக பதிவு செய்துள்ளார்.

அடுத்து இவர் முட்டை குடிக்கும் சாதனையை ஆரம்பித்தார். ஏற்கனவே இவர் ஐந்து நிமிடங்களில் 53 முட்டைகளை குடித்து ஒரு சாதனையை பதிவு செய்துள்ள நிலையில் நேற்றைய தினம் தனது சாதனையை முறியடிக்கும் வகையில் ஐந்து நிமிடங்களில் அறுபது முட்டைகளை குடித்து புதிய சாதனையையும் பதிவு செய்துள்ளார். இதுவும் இலங்கையின் ஒரு சாதனையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

elavaliappukkuddi-1

elavaliappukkuddi-2

elavaliappukkuddi-3

Related Posts