சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குறுதியையடுத்து பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
நேற்று மாலை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மக்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட விஜயகலா மகேஸ்வரன் பாதுகாப்புச் செயலர் வழங்கிய வாக்குறுதியை மக்களுக்குத் தெரிவித்ததையடுத்து போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
தன்னிடம் இன்னும் 15 நாட்களுக்குள் பரவிபாஞ்சான் மக்களின் ஒருதொகுதி காணி விடுவிக்கப்படுமெனவும், ஏனைய அனைத்துக் காணிகளும் அங்கிருந்து இராணுவம் முற்றாக வெளியேறியபின்னரே விடுவிக்கப்படும் எனத் தன்னிடம் தெரிவித்ததாகத் தெரிவித்திருந்தார்.
அத்துடன், குறித்த வாக்குறுதியை இன்று( வெள்ளிக்கிழமை) பாதுகாப்புச் செயலர் எழுத்துமூலம் உங்களுக்கு அனுப்பிவைக்கவுள்ளார் எனவும் தெரிவித்தார்.
விஜயகலா மகேஸ்வரனின் வாக்குறுதிக்கமைய மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர்.