முடிவுக்கு வந்தது ஆசிரியர்களின் போராட்டம்

ஐந்து வருடங்களுக்கு மேல் கஸ்ர பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்கு யாழ். வலயத்தின் முன் இடமாற்றத்தை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின் போராட்டம் கைவிடப்பட்டது.

teachers-education-ministry

போராட்டம் தொடர்பாக கருத்த தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ். மாவட்ட செயலாளர்,

01.06.2014 முதல் தகுதியுடைய அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததுடன் அதற்குரிய இடமாற்றக் கடிதம் இம் மாதம் 9 ம் திகதிக்கு முன் அனுப்பப்படும் என உறுதிமொழி வழங்கினார். இதனையடுத்துபோராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாவிட்டால் தாம் தொடர்ச்சியாக போராட்டத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து போராட்த்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts