இலங்கையில் முச்சக்கர வண்டிகள் தேவைக்கதிகமாக உள்ளதால் அவற்றை இறக்குமதி செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று, பாதுகாப்புடனான நவீன முச்சக்கர வண்டி ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் முச்சக்கரவண்டிகளில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமையெனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் சாரத்திப் பட்டி அமைக்கப்படவேண்டுமென நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்று கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.