யாழ்ப்பாணம், கொட்டடி கோணாத்தோட்டம் பகுதியில் வைத்து இளைஞர்கள் இருவர் மீது ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்த மூன்று இளைஞர்களில் இருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சுமார் 15 பேர் கொண்ட குழுவினரே இந்த இளைஞர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
சம்பவத்தில் மீனாட்சி அம்பாள் பகுமியை சேர்ந்த 24 வயதான எஸ்.நியூட்டன் மற்றும் சிவஞானம் வினோத் ஆகிய இருவருமே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.