முச்சக்கர வண்டிக்குப் பதிலாக சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் திணைக்கத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் முச்சக்கரவண்டியினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதனைக் கட்டுப்படுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆகவே அதற்குப் பதிலாக சிறிய ரக கார்களை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளோம்.
அத்துடன், பெற்றோலில் இயங்கும் முச்சக்கரவண்டியின் விலை 35,000 ரூபாவாலும் டீசலில் இயங்கும் முச்சக்கரவண்டியின் வலை 75,000 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.