பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் விசேட ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பொதுமக்கள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன். கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர் பற்றுசீட்டு வழங்குவது சாரதியின் பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வலது பக்கத்தால் உள்நுழைய முடியாமல் முற்றாக அல்லது பகுதி அளவு மூடிவைக்கப்படவேண்டும் என குறித்த வர்த்தமானி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புகைத்தல் அதேபோன்று குறுகிய பாதைகள் இருக்கும் போது பயணிகளின் அனுமதியின்றி நீண்ட தூரப் பாதைகளினூடாக செல்வதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுடைய பொதிகள் அல்லது பொருட்கள் தவறுதலாக முச்சக்கரவண்டியில் விட்டுச் செல்லப்பட்டிருந்ததால், அதனை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பது சாரதியின் பொறுப்பு என குறித்த வர்த்தமானி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.