தற்போதுள்ள அமைச்சரவை அமைச்ச பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இது தொடர்பில் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், டளஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதாரத் துறை அமைச்சராகவும், பவித்ரா போக்குவரத்து அமைச்சராகவும், காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தினேஸ் குணவர்த்தன கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, நாமல் ராஜபக்சவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அபிவிருத்தி கண்காணிப்பு என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.