Ad Widget

முகாமைத்துவ உதவியாளர் வகுப்பு III நேர்முகத் தேர்வு

Job_Logoமாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவையின் வகுப்பு III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைவாக மாவட்ட அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுடைய கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது.

இவ்வாறு குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றவர்கள் தத்தமது மாவட்டங்களின் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்களிற்கு எதிர்வரும் 10 ஆம் திகதி புதன் கிழமை காலை 9.00 மணிக்கு நேர்முகத்தேர்விற்கு சமூகமளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

நேர்முகத்தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் நேர்முக தேர்வுக்கு சமூகமளிக்கும் போது

  1. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் (போட்டோ பிரதி),
  2. திருமணமான பெண் நேர்முகத்தாரியாயின் விவாகச்சான்றிதழ் (போட்டோ பிரதி),
  3. தேசிய அடையாள அட்டை (போட்டோ பிரதி),
  4. கல்விச் சான்றிதழ் – க.பொ.த (உ/த), க.பொ.த (சா/த) (போட்டோ பிரதி),
  5. கிராம சேவை உத்தியோகத்தரினால் வழங்கப்பட்டு பிரதேச செயலரால் உறுதிப்படுத்தப்பட்ட நற்சான்றிதழ்/வதிவிடச் சான்றிதழ் (2013.04.12 ஆம் திகதிக்கு முன்னர் உள்ள 6 ஆண்டு காலப் பகுதியில் ஆகக்குறைந்தது 3 ஆண்டுகளாயினும் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வசித்தமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்),
  6. மாற்றுத்திறனாளியாயின் அது பற்றிய மருத்துவச் சான்றிதழ்,
  7. வாக்காளர் இடாப்பின் மூலப்பிரதி,
  8. குடும்ப அட்டை மூலப்பிரதி

    சமுகமளிக்கு மாறு வடமாகாண பிரதி பிரதம செயலாளர் நிர்வாகம் கேட்டுள்ளது.

 

Related Posts