முகாமைத்துவ உதவியாளர் நியமனம்: வடக்கில் 202 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு

அரச முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து 202 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

திறந்த போட்டிப் பரீட்சையில் பெற்ற பெறுபேற்றின் வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் 202 பேரும் தெரிவாகியுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 141 புள்ளிகளும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு 133 புள்ளிகளும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 136 புள்ளிகளும் வவுனியா மாவட்டத்துக்கு 131 புள்ளிகளும் மன்னார் மாவட்டத்துக்கு 133 புள்ளிகளும் வெட்டுப் புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையிலேயே 202 பேர் நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவாகியுள்ளனர்.
நேர்முகப் பரீட்சைத் திகதி மற்றும் விவரங்கள் பரீட்சாத்திகளுக்கு அறிவிக்கப்படும் என இணைந்த சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Related Posts