முகமாலை மக்களின் காணிகள் இன்று கையளிப்பு

கிளிநொச்சி – முகமாலை பகுதியிலுள்ள சிறிய இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள 700 ஏக்கர் காணி பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

60 குடும்பங்களின் காணிகள் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை 10 .00 அளவில் இடம்பெறவுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளே இவ்வாறு கையளிக்கப்பட்டவுள்ளன.

குறித்த காணிகளில் காணப்பட்ட கண்ணிவெடிக்கள் அகற்றப்பட்ட நிலையில் மக்களிடம் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் கையளிக்கப்படவுள்ளன.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில், காணி உரிமையாளர்கள் தற்காலிக வீடுகளை அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சு நிதி உதவிகளை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Related Posts