முகமாலை பகுதியில் 5 ஏக்கர் காணி விடுவிப்பு

கிளிநொச்சி – முகமாலை பகுதியில், இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த ஐந்து ஏக்கர் காணி நேற்று (27) விடுவிக்கப்பட்டது.

கிளிநொச்சி – முகமாலையில், இராணுவத்தின் 552 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்திருந்த பொதுமக்களின் காணி நேற்று விடுவிக்கப்பட்டன.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

552 ஆவது படைப்பிரிவின் கட்டளையதிகாரியினால், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம்,காணிகளுக்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

Related Posts