முகமாலை காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு!

கிளிநொச்சி – பச்சிளைபள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அக் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

minse-mukamalai

கடந்த 2000ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளே இன்றைய தினம் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்திராபுரம் பிரதேசத்தில் 14 குடும்பங்களின் 25 ஏக்கர் காணியும், முகமாலையில் 55 குடும்பங்களுக்கான ஆயிரத்து 800 ஏக்கர் காணியும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் விடுவிக்கப்படும் காணிகள், காணி உரிமையாளர்களால் அடையாளம் காணப்பட்டு, அப்பகுதிகளில் விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts