முகமாலையில் மிதிவெடியில் சிக்கி ஒருவர் பலி

BOMS_minsமுகமாலை பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 9.55 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த கே.முருகவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related Posts