முகமாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவா் காயம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தின் போது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி பளை இந்திராபுரம் எனும் புதிதாக மீள் குடியேற்றம் செய்த இடத்தில் குப்பைக்கு தீ வைத்தபோது மர்மபொருள் வெடித்ததில் இருவரும் காயமடைந்துள்ளனா்.

காயமடைந்த இருவரையும் முச்சக்கர வண்டியில் ஏற்றி பளை வைத்தியசாலைக்கு கொணடு சென்ற போது அங்கு நோயாளா் காவு வண்டி இல்லாததன் காரணமாக மனிதநேய கன்னிவெடி அகற்றும் பிரிவின் வானத்தில் ஏற்றி சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Related Posts