சமூக வலையமைப்பான முகப்புத்தகம் தொடர்பில் இதுவரையில் 30 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவமானப்படுத்தப்பட்டமை தொடர்பிலேயே அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணணிப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் முகப்புத்தகம் தொடர்பில் 250 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணணி அவசர அழைப்புப் பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்தரகுப்த தெரிவித்தார்.
முகப்புத்தகம் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் காணப்படும் பட்சத்தில் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் மேலும் குறிப்பிட்டார்.