முகப்புத்தகத்தை முடக்கும் வீடியோ வைரஸ்

நவீன தொழில்நுட்ப சாதன வளர்ச்சி காரணமாக சமூக ஊடகமாக முகப்புத்தகமும் (பேஸ்புக்) துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை தினமும் சிலமணி நேரங்களை முகப்புத்தகத்திற்கு என ஒதுக்குகின்றனர். இன்றைய உலகில் வேகமாக செய்திகள், தகவல்கள் பரவலடையும் ஊடகமாக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் உயர்வடைந்துள்ள நிலையில் அது தொடர்பாக அரசும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

Facebook-Spy-chat

இந்த நிலையில் முகப்புத்தகம் மீது அவ்வப் போது வைரஸ் தாக்கம் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது முகப் புத்தகத்தில் புது விதமான வைரஸ் தாக்கி வருகின்றது. இது விரைவாக பரவல் அடையக் கூடியதாகவும் உள்ளது. தற்போது பாவனையில் உள்ள அனைத்து முகப் புத்தகங்களுக்கும் ஒரு குறுஞ்செய்தி வருகின்றது அதை திறந்து பார்க்கும் போது, அவ் முகப்புத்தகத்தில் நண்பர்களாக இணைந்துள்ளவர்களில், யாராவது அந்த வேளையில் செயற்பாட்டில் (ஒன்லைன்) இருந்தால் அது உடனடியாக அவர்களுக்கும் செல்கின்றதை அவதானிக்க முடிகின்றது. இந்த வைரஸ் ஆனது குறுஞ் செய்தியாக வீடியோ வடிவில் முகப்புத்தகத்திற்கு வருகின்றது.

எமது முகப்புத்தக படத்துடன் வரும் அந்த செய்தியில் ‘I like funny Video. Please click and see the video’ என வருகிறது. அவ்வாறு வரும் அந்த குறுஞ் செய்தியை திறந்து பார்க்கும் போது அது எமக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வைரஸ் ஆக செல்கிறது.

அதன் பின் சிறிது நேரத்தில் முகப்புத்தகம் செயல் இழக்கிறது. அதன் பின் ரேன்ட் மக்றோ என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து அதன் மூலமே ஸ்கான் செய்து அதனை நீக்கி மீண்டும் இயங்கு நிலைக்கு கொண்டு வரமுடிகிறது. எனவே, முகப்புத்தக பாவனையாளர்கள் அவதானமாக இருக்கவும் வரும் குறுஞ்செய்தியை திறந்து பார்த்தவர்கள் முகப்புத்தக வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

Related Posts