முகப்புத்தகத்தில் பிரபாகரனிற்கு வாழ்த்து தெரிவித்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்தொன்றினை முகநூலூடாக பிரசுரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு மேலதிக நீதிவான் யூ.பி.ஆர். நெலும்தெனிய பேலியகொடை பொலிஸாருக்கு இன்று அனுமதியளித்தார்.

பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையே இவ்வாறு தடுத்து வைத்து விசாரிக்க நீதிவான் பொலிஸாருக்கு அனுமதியளித்தார்.

Related Posts