முகநூல் தோழிகளின் உலக சாதனை!!

பேஸ்புக் மூலம் தோழிகளான பெண்கள் 2500 பேர் சேர்ந்து மிகப்பெரிய போர்வையை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.

Mother India's Crochet Queens world record 2

இந்த போர்வையின் அளவானது கிட்டத்தட்ட அமெரிக்காவின் 2 கால்பந்து மைதானங்களுக்குச் சமமாகும். இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் சுமார் 1000 பேர் இணைந்து உருவாக்கிய போர்வையே உலக சாதனையாகக் கருதப்பட்டு வந்தது.

தற்போது அந்தச் சாதனையை இந்தியப் பெண்கள் முறியடித்துள்ளனர். சமூகவலைதளங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள மட்டும் இல்லாமல் பல நேரங்களில் ஆக்கப்பூர்வமான செயல்களுக்காகவும் பயன்படுகிறது. சென்னை வெள்ளத்தின் போது சமூகவலைதளப் பக்கங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து தக்கசமயத்தில் உதவிகள் கிடைத்தன.

இந்நிலையில் பேஸ்புக்கில் தோழிகளான பெண்கள் குழு சேர்ந்து உலகின் மிகப்பெரிய போர்வையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த 2500 பெண்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர். Mother India’s Crochet Queens என்ற -முகநூல் குரூப்பை சேர்ந்த இந்த பெண்கள் சுமார் 6 மாத கால உழைப்பில் இந்த சாதனை போர்வை உருவாக்கியுள்ளனர்.

கொக்கிப்பின்னல் முறையில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய போர்வைகளைக் கொண்டு இந்த உலக சாதனை போர்வையை இந்த பெண்கள் தயாரித்துள்ளனர்.

இந்த போர்வையானது 1,20,000 சதுர அடி பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை போர்வையானது ஏழை மக்களுக்கு பிரித்து அளி்க்கப்பட உள்ளது.

Mother India's Crochet Queens world record

Related Posts