முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முகத்தை மறைக்கும் தலைக்கவசத்தை அணிந்து மோட்டார் சைக்கிளை செலுத்துவோரை அவசரக்காலச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவ்வாறு பயணிப்போரை கைது செய்து வழக்கு தொடர முடியும் என சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து நாட்டில் சுற்றிவளைப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts