முகக்கவசம் இன்றி பயணிக்கத்தடை

அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் வீதிகளில் பயணிப்போர் முகக்கவசம் அணிதல் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் வீதிகளில் பயணிப்போர் மற்றும் வாகனங்களில் பயணிப்போர் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பதில்பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொலிஸார் மற்றும் முப்படையினரை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Related Posts