முகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

முகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

,தற்கமைய, பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய முகக்கவசமொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 15 ரூபாவாகும்.

பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய சத்திரசிகிச்சை முகக்கவசமொன்றின் விலையும் 15 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

N95 ரக முகக்கவசமொன்றின் விலை 150 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விலைகளுக்கு அதிகமாக முகக்கவசங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் பதுக்கி வைத்துள்ள வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts