மீள்குடியேற்ற ஏற்பாடுகளைப் பார்வையிட்டார் கமல்!

வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்ற ஏற்பாடுகளை வடக்கு மாகாண சபைத் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

k3

அண்மையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நெறிப்படுத்தலில் மேற்படி ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக பலாலி வடக்கு மற்றும் கிழக்கு, வளலாய் ஆகிய பகுதியில் மக்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

k5

மேற்படி பகுதிகளில் துப்பரவு செய்யும் நிலமையையும் பூர்வாங்க ஏற்பாடுகளையும் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறிமோகனன், கோப்பாய் பிரதேச செயலர் பிரதீபன், உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

வளலாயில் மீள்குடியமர இதுவரையில் 129 குடும்பங்கள் பதிவு

3 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியமர்வதற்கு அனுமதி – அரச அதிபர்

Related Posts