மீள்குடியேற்றம் துரித கதியில் இடம்பெறும் – சுவாமிநாதன்

யுத்தத்தால் இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Swaminathan

வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்களையும் இலங்கையில் நலன்புரி முகாம்களிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் உள்ள 7840 குடும்பங்களுக்கு உட்பட்ட 26056 பேர் உள்ளார்கள்

அவர்களை மீள்குடியேற்றம் செய்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் அரசின் கடமை. எனவே அவற்றை விரைவாக செய்து கொடுக்கவுள்ளோம்.

அது மட்டுமின்றி இந்தியாவில் அகதி முகாம்களில் இருக்கும் மக்கள் நாடு திரும்பி தங்களுடைய சொந்த கிராமங்களில் வாழ்வதற்கு அவர்களை ஊக்குவிக்கு முகமாக இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழலை அவர்களிடம் எடுத்துச் சொல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்

மீள்குடியேற்றம் புனர்நிர்மாண வேலைகளை முன்னெடுக்கும் போது தேசிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்புமின்றி இந்த வேலைத் திட்டத்தினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts