மீள்குடியேற்றம் குறித்து ஆராய பாதுகாப்பு செயலர் இன்று யாழ். வருகை

மீள்குடியமர்வு தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பஸநாயக்க இன்று யாழ்ப்பாணம் வரவுள்ளார்.

வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்ட பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய கடந்த மாதத்தின் இறுதியில், மீள்குடியேற்ற அமைச்சர் யாழ். வந்திருந்தார். இந்தப் பயணத்தின் போது வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றுவது தொடர்பிலும், மக்களின் தேவைகளுக்கு முக்கிய பாதைகளை விடுவிப்பது தொடர்பிலும், ஆராயப்பட்டிருந்தது.

இராணுவத்தினர் குறித்த பாதைகள் மற்றும் முகாம்கள் அகற்றுவது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் பதில் வழங்குவதாகத் தெரிவித்திருந்தனர்.

இந்தப் பின்னணியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பஸ்நாயக்க இன்று யாழ். வரவுள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் பலாலியில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். இதன் பின்னர் எடுக்கப்படும் முடிவுக்கு அமைய காணிகள் விடுவிக்கப்படக் கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts