வலி.வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும் அங்கு இடம்பெறும் வீடழிப்பினை நிறுத்தக் கோரியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
காங்கேசன்துறைப் பொலிஸார் வீதித்தடை அமைத்து உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள வருபவர்களை விசாரணைகள் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளதுடன், தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் : தீபன்
தொடர்புடைய செய்திகள்
மிரட்டலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறும்!
வலி.வடக்கு தவிசாளருக்கு இனந்தெரியாதோரால் கொலை மிரட்டல்!
3 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியமர்வதற்கு அனுமதி – அரச அதிபர்
வலி வடக்கு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நாளை மறுதினம் கவனயீர்ப்பு போராட்டம்!