மீரியபெத்த நிலத்தில் பிளவு!!, 101 குடும்பங்கள் வெளியேற்றம்

கொஸ்லந்தை, மீரியபெத்தயில் கடந்த மாதம் 29ஆம் திகதி பாரிய மண்சரிவுக்கு உள்ளான பகுதிக்கு எதிராகவுள்ள காணியில் சுமார் ஒரு அடி அகலத்துக்கு பிளவு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் வசித்த 101 குடும்பங்களை, கொஸ்லந்தை ஸ்ரீ கணேஷா வித்தியாலயத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதியில், மற்றுமொரு மண்சரிவு ஏற்பட்டால், மீரியபெத்தவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அப்பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts