கொஸ்லந்தை மீரியபெத்தயில் இடம்பெற்ற மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு மாகாண சபையினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் நேற்று மக்களிடம் கையிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய அளவு நிவாரணப் பொருட்கள் உள்ளமையாலும் மக்களிடம் நேரடியாக பொருட்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற காரணங்களினால் வடக்கு மாகாண சபையினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கடந்த சில வாரங்களாக கொண்டு செல்லப்படாது இருந்தது.
எனினும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானமும் இணைந்து நேற்று மீரியபெத்தை மக்களிடம் நிவாரப் பொருட்களை கையளித்துள்ளனர்.